கல்வியுடன் ஒழுக்கம், அறநெறியை கற்றுக்கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை

கல்வியுடன் ஒழுக்கம், அறநெறியை கற்றுக்கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர் கல்விக்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் ‘அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை’ இயங்குகிறது.

2019-20-ம் ஆண்டுக்கான கல்விஉதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிகாணொலி மூலம் நடைபெற்றது. இதில், 1,135 மாணவர்களுக்கு ரூ.64 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ந.கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, "மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கம், அறநெறியும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்க வேண்டும். மாணவர்கள் படிப்புடன் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, "உயர் கல்விமாணவர் சேர்க்கையில் இந்தியாபின்தங்கியுள்ளது. உயர் கல்விக்கு மத்திய அரசு 6 சதவீதத்துக்கு மேலாக நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in