

அரசியலில் இருந்து ரஜினி விலகி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சமீபத்தில் அவரது பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், ரஜினி தனது ட்விட்டர்பக்கத்தில் அது தன்னுடைய அறிக்கைஅல்ல என்று தெரிவித்திருந்தார். இருப்பினும், மருத்துவர்கள் அவ்வாறு கூறியது உண்மைதான் என்றும், இதுகுறித்து தனது மன்ற நிர்வாகிகளுடன் பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை,திருச்சியை தொடர்ந்து, தற்போது கோவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
கோவை டவுன்ஹால் பகுதியில் "மாற்றம் விரும்பும் மக்கள்" என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் ‘‘எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் ,நீங்க வாங்க ரஜினி’’ என்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன.