ரஜினியின் ஆதரவாளர்கள் பாஜக-வின் ஆதரவாளர்களே: பாஜக மாநில பிரச்சாரப் பிரிவு தலைவர் தகவல்

சேலத்தில் பாஜக-வின் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவின் மாநில நிர்வாகிகள் கூட்டம்  நடைபெற்றது. இதில், மாநில பிரச்சாரப் பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் பேசினார்.		                                    படம்: எஸ்.குரு பிரசாத்
சேலத்தில் பாஜக-வின் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில பிரச்சாரப் பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் பேசினார். படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

ரஜினியின் ஆதரவாளர்கள் எல்லோரும் பாஜக-வின் ஆதரவாளர்கள் தான் என பாஜக மாநில பிரச்சாரப் பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜக-வின் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. பாஜக சேலம் மாவட்ட பிரச்சாரப் பிரிவு தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் குமரி கிருஷ்ணன், துணைத் தலைவர் தங்கராஜ் உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தின்போது, குமரி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. திமுக உடைந்து வரும் கட்சியாக இருக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் வேளாண் சட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார். இதை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க மண்டலம் வாரியாக பாஜக வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது.

திமுக உள்ளிட்ட தீய சக்திகளை சம்ஹாரம் செய்யும் வகையில், பாஜக மாநிலத் தலைவர் முருகன், வெற்றிவேல் யாத்திரையை வரும் 6-ம் தேதி தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் முடிக்கிறார். திமுக-வுக்கு இந்துக்கள் தான் வாக்களிக்கின்றனர். ஆனால், அவர்கள் இந்துப் பெண்களையும், இந்து மதத்தையும் அவதூறாகப் பேசுகின்றனர்.

ரஜினியின் ஆதரவாளர்கள் எல்லோருமே, பாஜக-வின் ஆதரவாளர்கள் தான். அவரது ஆதரவாளராக இருந்த அண்ணாமலை ஐபிஎஸ் பாஜக-வில் இருக்கிறார். படித்தவர்கள் கையில் ஆட்சி இருக்க வேண்டும் என ரஜினி கூறியிருக்கிறார். அந்தக் கருத்து பாஜக-வுக்குத் தான் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in