Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்: காற்றில் பறந்த ‘கரோனா’ விதிமுறைகள்

தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி என்.எஸ்.பி. சாலையில் நேற்று கரோனா அச்சமின்றி ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க திரண்ட மக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், கரோனா அச்சமின்றி பொதுமக்கள் பலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெ ளியை கடைபிடிக்காமலும் இருப் பதால், கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நவ.14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் குடும்பம், குடும்பமாக திருச்சி மாநகரிலுள்ள கடை வீதிகளுக்கு வரத் தொடங்கியுள் ளனர். குறிப்பாக என்எஸ்பி சாலை, நந்திகோயில் தெரு, பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி, மேலரண் சாலை, தில்லைநகர், சாஸ்திரி சாலை உள்ளிட்ட சாலை களில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

ஆனால், இதில் பெரும்பாலா னவர்கள் முகக்கவசம் அணிய வில்லை. சமூக இடைவெளியையும் யாரும் கடைபிடிக்கவில்லை. பல்வேறு கடைகளின் நுழைவு வாயில்களில் கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தாலும் அதை பலரும் பயன்படுத்தவில்லை. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், மக்களின் இதுபோன்ற அலட்சிய நடவடிக்கைகள் கரோனா பரவலை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன் னாள் துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ.அலீம் கூறும்போது, ‘‘கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், கடைவீதிகளில் மக்கள் கரோனா அச்சமின்றி முகக் கவசம் அணி யாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பது, பாதிப்பை மீண்டும் அதிகரிக்கவே செய்யும். எனவே, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பையும், மற்றவர்களது பாதுகாப்பையும் உணர்ந்து, கட்டாயம் மாஸ்க் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடை வீதிகளுக்கு செல்பவர்கள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

கடைவீதிகளில் கூட்டம் அதிக மாக இருக்கும்போது, அங்கு வருபவர்களில் யாராவது ஒருவ ருக்கு தொற்று இருந்தாலும், மற்றவர்களுக்கு உடனடியாக பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.

கேரளாவில் ஓணம் பண்டிகை தளர்வுகளுக்கு பிறகே அங்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, தீபாவளி பண்டிகையால் கரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய முன் னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளவும், ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x