தேவர் நினைவிடத்தில் நடந்துகொண்ட விதத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

தேவர் நினைவிடத்தில் நடந்துகொண்ட விதத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை
Updated on
1 min read

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணா மலை கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவில் அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமானப்படுத்துவது போலநடந்துகொண்டார். திருநீறை டால்கம்பவுடர் போல பயன்படுத்தியுள்ளார். பாஜக இதை வன்மையாக கண்டிக்கிறது.

கொள்கையை விட்டுக் கொடுக் காத பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், கொள் கையே இல்லாத ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றமாகும். இச்சம் பவத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக ஸ்டாலின் இவ் வாறு நடந்து கொள்கிறார்.

பாஜக எந்த மதத்துக்கும் எதிரானதல்ல. வேல் பிரச்சாரம் நவ.6-ம் தேதி தொடங்கி டிச.6-ம்தேதி நிறைவடைகிறது. டிச.6-ம் தேதிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.வேல் பிரச் சாரத்துக்கும் மதரீதியான சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் வேல் பிரச்சாரத்துக்கு அரசு தடை விதிக்காது.

வேல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் உருவப் படத்தைப் பயன்படுத்துவது குறித்து விமர் சனங்கள் எழுந்துள்ளன.

எம்ஜிஆர் ஒரு பொதுவான தலைவர். 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் நடந்துகொண்டது குறித்து ஸ்டா லின் புரிதல் இல்லாமல் பேசுகிறார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in