

புதுச்சேரியில் இன்று நடைபெறும் மகளிர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் நடிகை நக்மா பங்கேற் கிறார்.
இதுதொடர்பாக புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் தலை வர் பிரேமலதா நேற்று வெளி யிட்ட அறிக்கை வருமாறு: புதுச் சேரி மாநில மகளிர் காங்கிரஸ் செயவீரர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெறு கிறது. இக்கூட்டத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கமிட்டி யின் பொதுச் செயலாளர் நக்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங் கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் நாராயணசாமி, எதிர் கட்சி தலை வர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் நமசிவாயம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் கள், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார். மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப் பேற்ற பிறகு முதல் முறையாக நக்மா புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.