

தேசிய தாய் பாக்சிங் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சிப் பள்ளி மாணவி பி.கே.அமலா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
பெரம்பூர் மாதவரம் நெடுஞ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப் பவர் பி.கே.அமலா. அவர் கடந்த 4 ஆண்டுகளாக பாக்சிங்கும் (கைகளை பயன்படுத்துவது) 8 ஆண்டுகளாக டேக்வான்டோவும் (கால்களை பயன்படுத்துவது) பயின்று வருகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் கான்ட்வாவில் கடந்த 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய தாய் பாக்சிங் (கைகளையும் கால்களையும் பயன்படுத்துவது) போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். எருக்கஞ்சேரி சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் இவரது தம்பி பி.கே.அர்ஜுனா இதே போட் டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இது குறித்து பி.கே.அமலா கூறும்போது, “எனக்கு சிறு வயதி லிருந்தே பாக்சிங்கில் ஆர்வம் உண்டு. எனது பயிற்சியாளர்கள் லோகேஷ் மற்றும் கரண் ஆகி யோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேசப் போட்டி யிலும் நிச்சயம் தங்கம் வெல்ல வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறேன்” என்றார்.
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.செல்வ குமாரி கூறும்போது, “எங்கள் பள்ளி மாணவியே எங்களது உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதனால் பல கலைகளையும் மாணவிகள் கற்க அனைவரும் இணைந்து முயன்று வருகிறோம். ஒரு மாணவி வெற்றி பெறும்போது மற்ற மாணவிகளும் ஊக்கமடைந்து பயிற்சி பெற விரும்புகிறார்கள்” என்றார்.