

இளைஞர்களின் கனவை திமுக நனவாக்கும் என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், நேற்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பொது மக்களில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பெரம்பலூரில் மகளிர் சுய உதவிக் குழுவினரை ஸ்டாலின் சந்தித்தார். இதைத் தொடர்ந்து வாலிகண்டபுரத்தில் விவசாயி களைச் சந்தித்து அவர்களின் குறை களைக் கேட்டறிந்தார். பின்னர் லெப்பைக்குடிக்காடில் இஸ்லாமிய சமூக பிரதிநிதிகளை ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
பின்னர் சு.ஆடுதுறையில் வேலையில்லா பட்டதாரிகளை அவர் சந்தித்தார். அப்போது பேசிய இளைஞர்கள், “லட்சக்கணக் கான இளைஞர்கள் வேலையில்லா மல் இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பைப் பெறுவதில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
அவர்களுக்குப் பதிலளித்து பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கருணாநிதி ஏற்கெனவே அறிவித்துள்ளார் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு இணக் கமான செயல்பாடுகள், ஊழலற்ற ஆட்சி ஆகிய 3 இலக்குகளை முதன்மையாகக் கொண்டு திமுக செயல்படும்” என்றார்.