

விழுப்புரத்தைச் சேர்ந்த மல்லர் கம்ப கழக நிறுவனர் உலகதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டை மன்னர்கள் ஆண்டகாலத்தில், மல்லர் கம்பம் விளையாட்டை, போர் வீரர்கள் தங்கள்ஓய்வு நேரத்தில் விளையாடி யுள்ளனர். இந்த விளையாட்டு, சிறந்த உடற்பயிற்சியாகும்.
சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலை சிறந்த மல்லர்கள் இருந்தார்கள். மல்லர் விளை யாட்டிலும் மல்யுத்தத்திலும் தலைசிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல்ல வன் மாமல்லன் என பெருமையோடு அழைக்கப்பட்டான்.
சிலம்பம், களரி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மக்கலை போன்றதற்காப்புக் கலை போல் மனிதன்உடலையும் மனதையும் கட்டுப் படுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.
மராட்டியம் மற்றும் வட மாநிலங்களில் இந்த மல்லர் விளை யாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகமும் இந்த விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத்தின் நிறுவனர் உலகதுரை. 81 வயதான இவருக்கு இந்திய மல்லர் கம்பம் கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. அடுத்த மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் விழாவில் இவ்விருது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கவுதம் கம்பீர் வழங்கு றார்.
இது குறித்து விழுப்புரத்தில் உள்ள உலகதுரையிடம் கேட்ட போது அவர் கூறியது:
உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும்போதே 1970 ம் ஆண்டு முதல் மல்லர் கம்பத்தை இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கினேன். 300 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் இப்பயிற்சி பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் நல்லாசிரியர் விருது, பாவேந்தர் பணி செம்மல் விருது, உடற்கல்வி கலைமாமணி விருது, மல்லர் கம்ப மகாகுரு விருது போன்ற விருதுகள் பெற் றுள்ளேன். தற்போது இந்திய மல் லர் கம்ப கழகத்தலைவர் ரமேஷ் இண்டொலா வாழ்நாள் சாதனை விருது வழங்க உள்ளதாக அறிவித் துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இடம் பெற்ற மல்லர் கம்பம் விளையாட்டு விரைவில் ஒலிம்பிக் போட்டியிலும் இடம்பெறும். ஆனால் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் இன்னமும் இந்த விளையாட்டை இணைக்காமல் உள்ளது வேதனை அளிக்கிறது. மல்லர் கம்பத்தை வளர்ப்பதன் மூலம் நம் சமூக இளையோரின் உடல் திறனையும் நன்கு வளர்க் கலாம் என்று தெரிவித்தார்