சாத்தூர் அருகே சின்னகொல்லபட்டியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்பாண்டங்கள் கண்டெடுப்பபு

சாத்தூர் அருகே சின்னகொல்லபட்டியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்பாண்டங்கள் கண்டெடுப்பபு
Updated on
1 min read

சாத்தூர் அருகே சின்னகொல்ல பட்டியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சின்ன கொல்லபட்டியில் மீன் வளர்க்கப் பண்ணைக்குட்டை தோண்டிய போது 5-க்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் வெளிப்பட்டன. இந்தத் தாழியிலிருந்து பல்வேறு அளவிலான மண்பாண்டங்கள் கிடைத்தன. இது தொடர்பாக தொல்லியல் ஆய்வாளரும்,  எஸ்.ராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியருமான பா.ரவிச்சந்திரன், நூலகர் சு.நட்டார் ஆகியோர் களஆய்வில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் பா.ரவிச்சந்திரன் கூறியதாவது: பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை பெரியதாழிகளில் வைத்து புதைத்தனர். இந்த புதைவிடங்கள் ‘தாழிமேடு’ என அழைக்கப்பட்டது. புறநானூற்றில் செய்யுள் 228, 238 ஆகியவற்றில் தாழிகளில் புதைப்பது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்த தொல் வாழ்விடங்களுக்கு அருகில் இப்புதைவிடங்கள் காணப்படு கின்றன.

இந்த கிராமத்திலும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடத் துக்கு அருகிலேயே தொல் வாழ் விடம் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்துள்ளன. இங்கு கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள், குடுவை, மூடிகள், மண் கலயங்கள், சங்கு வளையல்கள், வட்டசில்லுகள், நுண்கருவிகள் ஆகிய பொருட் கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் வைப்பாற்றின் கரையில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே செழிப் பான நாகரிகம் இருந்துள்ளதை அறியலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in