பாஜக வெற்றிவேல் யாத்திரைக்கான வேல் வைத்து திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு

பாஜக வெற்றிவேல் யாத்திரைக்கான வேல் வைத்து திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு
Updated on
1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கான வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாஜக சார்பில் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6 வரை தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் வெற்றிவேல் யாத்திரை நடைபெறவுள்ளது.

நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கவுள்ள இந்த யாத்திரைக்கான 'வேல்'யை சூரசம்ஹார ஸ்தலமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைத்து அக்கட்சியினர் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நிகழ்ச்சியில், பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் ஜெய்ஆனந்த், செய்தி தொடர்பு பிரிவு தலைவர்கள் திருத்தணி கோகுலகிருஷ்னன், தூத்துக்குடி மு.பாலமுருகன், திருநெல்வேலி நடராஜன், திருச்செந்தூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துக்குமார், அரசு தொடர்பு பிரிவு தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செய்தி தொடர்பாளர் நம்பிலிங்கம், மாவட்ட செயலாளர் ஹரிஹரன், தூத்துக்குடி கிழக்கு மன்டலத் தலைவர் சந்தானகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in