Published : 30 Oct 2020 01:07 PM
Last Updated : 30 Oct 2020 01:07 PM

நானும் அரசுப்பள்ளி மாணவன் தான்:7.5% உள் ஒதுக்கீடு அரசாணை குறித்து நெகிழ்ந்த முதல்வர் பழனிசாமி

ராமநாதபுரம்

சமூக நீதியைப் பாதுகாக்கவே 7.5% உள் ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டது என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் ​செய்தியாளர்களை சந்தித்த முதலல்வர் எடப்பாடி பழனிசாமி, "தென் மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி - குண்டாறு திட்டத்தை அதிமுக அரசு நிச்சயமாக நிறைவேற்றும்.

அதேபோல், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிறைய திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. மாநிலம் முழுவதும் பல இடங்களிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைத்துள்ளோம், தூண்டில் வளைவுகள், கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர்கள் அமைத்தல் என பலவகையிலும் அரசு உதவியாக உள்ளது. மீனவர்கள் நலன் காக்க அதிமுக அரசைப்போல் வேறு எவரும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கமாட்டார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருதியே அதிமுக அரசு மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதலுக்கு சட்ட முன்னோடி அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு தாமதமானது.

அரசுப் பள்ளியில் ஏழை, எளிய மாணவர்கள் தான் பயில்கின்றனர். அவர்களின் மருத்துவக் கனவு நனவாக வேண்டும். நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதியைப் பாதுகாக்கவே இதைச் செய்துள்ளோம்.

எதிர்க்கட்சித் தலைவர்கூட கோரிக்கை வைக்கவில்லை. மாணவர் நலன் கருதி அரசாணை வெளியிட்டுள்ளோம்.

ஆனால், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.அவை எடுபடாது. இந்த ஆண்டே 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவோம்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x