

நீதிமன்றத்துக்குள் போராட்டம் நடத்திய10 வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, கடந்த 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் 12 பேர் தலைமை நீதிபதி எதிரே அமர்ந்து காலை முதல் மாலை வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை வழங்கியும் கேட்காததால், 12 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு பெண் வழக்கறிஞர்களுக்கு உடனே ஜாமீன் வழங்கப்பட்டது. மீத முள்ள 10 பேரும் சிறையில் அடைக் கப்பட்டனர். தங்களுக்கு ஜாமீன் கோரி, இவர்கள் அனைவரும் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆதி நாதன் தள்ளுபடி செய்து உத்தர விட்டார். இதையடுத்து ஜாமீன் கோரி அவர்கள் உயர் நீதிமன்றத் தில் மனுதாக்கல் செய்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இந்த மனுக்களை நேற்று விசாரித்து, 10 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இவர்கள் அனைவரும் சம்பந்தப் பட்ட காவல்துறையினர் விசா ரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும். காவல்துறை விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணையின்போது மனுதாரர் கள் சாட்சிகளைக் கலைக்கக் கூடாது. விசாரணையின்போது மனுதாரர்கள் தலைமறைவாகக் கூடாது. மனுதாரர்கள் எதிர்காலத் தில் நீதிமன்ற வளாகத்திற்குள் எவ் விதமான போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. மனுதாரர்கள் இந்த நிபந்தனையை மீறினால், அவர்கள் மீது விசாரணை நீதிமன்ற நீதிபதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதி எஸ்.வைத் தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.