Published : 29 Oct 2020 02:33 PM
Last Updated : 29 Oct 2020 02:33 PM

மழை நீர் தேங்கிய இடங்கள் குறைவு; உடனடியாக அகற்ற உதவி எண்கள் அறிவிப்பு: சென்னை மாநகராட்சி

தொடர் நடவடிக்கையால் மழை நீர் தேங்கும் இடங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. சுரங்கப் பாலங்களில் தேங்கிய மழை நீரும் அகற்றப்பட்டது. வடகிழக்குப் பருவமழையை ஒட்டி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு 851 இடங்களில் பருவமழைக் காலங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. 2017 ஆம் ஆண்டு மழைக் காலங்களில் 306 இடங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கி இருந்தது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் மண்டலம் 7,11 மற்றும் 12இல் உலக வங்கி மூலமாக ரூ.1200 கோடி நிதி உதவி பெற்று 406 கிலோ மீட்டர் நீளம் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் விடுபட்ட, தூர்ந்து போன மழை நீர் வடிகால் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு 412 இடங்களில் கட்டப்பட்டுள்ளது.

தற்போது பெய்த மழையில் 3-ல் இருந்து 10 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சர்வதேச அளவில் 6 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும்போது குறைந்தது 2 மணி நேரம் நின்று செல்லும். ஆனால், தற்போது பெய்த மழையால் இரண்டு மணி நேரத்திற்குள் மழை நீர் அகற்றப்பட்டது.

சென்னை மக்கள் வடகிழக்குப் பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 044 2538 4530, 044 2538 4540.

24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x