

இலங்கைத் தமிழர் நலனில் பாஜகவுக்கு அக்கறை இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், சமூகப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை யினர், தலித்துகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் தாக் கப்படுவது அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க பிரதமர் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
இலங்கையில் நடந்த போரின் போது, இலங்கைத் தமிழர்கள் பறிகொடுத்த நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவும், காணாமல் போனதாகக் கூறப் படும் தமிழர்களை மீட்கவும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் அனைத் துக் கட்சிகளின் சார்பில் ஒருமன தாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இது இலங்கைத் தமிழர்களின் நலனில் பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டு கிறது.
வெளிநாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவில் தொழில் தொடங்க வழிவகை செய்யும் பிரதமர், நம் நாட்டில் ஏழைகளைப் பாதிக்கும் பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைப் பற்றி கவலைப் படவில்லை என்றார்.