Published : 29 Oct 2020 10:20 AM
Last Updated : 29 Oct 2020 10:20 AM

வணிக நிறுவனங்களில் கண்துடைப்புக்காக ‘பார்க்கிங்’ வசதி: மதுரையில் விழா காலங்களில் தொடரும் நெரிசல்

மதுரை மாநகரில் ‘பார்க்கிங்’ வசதியை ஏற்படுத்தாமல் கட்டப் படும் வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சியும், உள்ளூர் திட்டக் குழுமமும் அனுமதி வழங்குவதால் அந்த நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலை களையே ‘பார்க்கிங்’ ஆக பயன்படுத்துகிறார்கள். இதனால் விழாக் காலங்கள் மட்டுமல்லாது சாதாரண நாட்களிலும் மக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர்.

தீபாவளி நெருங்குவதால் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க பக்கத்து மாவட்ட மக்கள் மதுரையில் அதிகளவு வருகின்றனர். ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக் கடைகள் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி அமைந்துள்ள மாசி வீதிகள், மாரட் வீதிகள், ஆவணி வீதிகள், டவுன் ஹால் ரோடு, நேதாஜி ரோடு, விளக்குத்தூண், காமராஜர் சாலை பகுதியில் அமைந்துள்ளன.

இந்நிறுவனங்கள் அனைத்தும், மாநகராட்சி மற் றும் உள்ளூர் திட்டக்குழுமம் நிர்ணயித்துள்ள ‘பார்க்கிங்’ வசதியை ஏற்படுத்தவில்லை. அன்றாடம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் கூட ‘பார்க்கிங்’ வசதியே இல் லாமல் செயல்படுகின்றன. பெய ரளவுக்கு சில கார்கள் நிறுத்தும் அளவுக்கு கீழ் தளத்தில் பார்க்கிங் வைத்துள்ளனர்.

அந்தப் பகுதி நிரம்பியதும், கார்கள், இரு சக்கர வாகனங்களை வாடிக்கையாளர்கள் சாலைகளில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங் களைத் தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்வதால், அச்சாலை வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து போலீஸாரும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்படுகின்றனர்.

பார்க்கிங் வசதியில்லாத நிறுவனங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

அதிகாரிகளின் இந்த கண்டு கொள்ளாத போக்கால் தினமும் மக்கள் நகர சாலைகளைக் கடப் பதற்குள் நரக வேதனையை அனு பவிக்கின்றனர்.

அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்

தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள், நகர் பகுதிகளில் நடக் கிறது. சாலைகளில் ஆக்கிரமிப் புகளை அகற்றி விரிவுபடுத்தாமல் பழைய சாலை அளவிலேயே பணிகள் நடக்கின்றன.

இதனால் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்குப் பிறகு நகர போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்ப்பும் கேள்விக் குறியாகி விட்டது.

குறிப்பாக மீனாட்சியம்மன் கோயில் பகுதி வீதிகளில் மக்கள் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு வாகன நிறுத்தமாக மாறியுள்ளது. மாநகராட்சியைப் போல் உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவரான மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் அதிகரித்து வரும் நெரிசலை கண்டும், காணாமல் உள்ளனர்.

‘பார்க்கிங்’ வசதியில்லாத வணிக நிறுவனங்களால் நகரின் எதிர்கால வளர்ச்சி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகர் நெரிசலால் பெரும் நிறுவனங்கள், தொழில் முனைவோர், மதுரையில் தொழில் தொடங்குவதைத் தவிர்த்து கோவை, திருச்சி உட்பட மற்ற நகரங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள பெரும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் கடந்த காலத்தில் அமைந்தவை.

தற்போது அவற்றை முறைப்படுத்த மட்டுமே முடிகிறது. புதிய கட்டிடங்கள் கட்டும்போது நிர்ணயிக்கப்பட்ட பார்க்கிங் வசதியை ஏற்படுத்தினால் மட்டுமே செயல்பட அனுமதிக்கிறோம்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x