Published : 29 Oct 2020 06:31 AM
Last Updated : 29 Oct 2020 06:31 AM

2021-ல் 23 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு பட்டியல் வெளியீடு

சென்னை

2021-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதில் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக உள்ளன. இதுதொடர்பாக பொதுத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் 2021-ம் ஆண்டு அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும். இதுதவிர, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கைப்படி, பொது விடுமுறை நாளாக குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன், பின்வரும் 23 நாட்களும் 2021-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும்.

இதில், வங்கிகளுக்கான ஆண்டுக்கணக்கு முடிவு நாளான ஏப்.1-ம் தேதி, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 23 நாட்களில், ஜன.16 (உழவர் திருநாள்), ஏப்.25 (மகாவீர் ஜெயந்தி), மே 1 (மேதினம்), ஆக.15 (சுதந்திர தினம்), அக்.2 (காந்தி ஜெயந்தி), டிச.25 (கிறிஸ்துமஸ்) ஆகிய 6 அரசு விடுமுறைகள் வழக்கமான விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. புனித வெள்ளி, ரம்ஜான், மொகரம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதால், சனி, ஞாயிறு சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x