Published : 29 Oct 2020 06:28 AM
Last Updated : 29 Oct 2020 06:28 AM

கரோனா விழிப்புணர்வு குறும்படங்கள்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

சென்னை

கரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படங்கள் மற்றும் குறும்பாடல்களை முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள்செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதது, தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான மனநல ஆலோசனை உட்பட 24 தலைப்புகளில் துண்டு பிரசுரங்கள், மடிப்பேடுகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள மக்கள் தொகை அதிகமாக உள்ள ஊராட்சி பகுதிகளில்வீடுதோறும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் காவல் துறை வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 54 விழிப்புணர்வு குறும்படங்கள், குறும்பாடல்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி மற்றும் பிற துறைகளால்தயாரிக்கப்பட்டு, அனைத்துதொலைக்காட்சி சேனல்களுக்கும்,தனியார் உள்ளூர் சேனல்களுக்கும் வழங்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கரோனாவுக்கு எதிரான 33 மக்கள் இயக்கவிழிப்புணர்வு விளம்பர வாகனங்களை முதல்வர் பழனிசாமி நேற்றுகொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், கரோனா தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள், குறும்பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளை முதல்வர் வெளியிட, அவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும்விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலர்க.சண்முகம், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x