‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுரைப் போட்டி: மாநகராட்சி அறிவிப்பு

‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுரைப் போட்டி: மாநகராட்சி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் மூலமாக இந்தியாவில் 98 நகரங்கள் ‘ஸ்மார்ட் நகரமாக’ மாற்றப் படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 12 நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும்.

ஸ்மார்ட் சிட்டி பற்றி பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு, நகரின் குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் சம்பந்தமான ‘என் நகரைப் பற்றிய என் கனவு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளலாம். கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். அக்டோபர் 30-ம் தேதிக்குள் தலைமை கல்வி அதிகாரி, ரிப்பன் கட்டிடம், சென்னை 600 003 என்ற முகவரிக்கு கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டும். உறையின் மீது “என் நகரைப் பற்றிய என் கனவு” கட்டுரைப் போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்.

பங்குபெறும் மாணவரின் பெயர், வயது, படிக்கும் வகுப்பு, பள்ளியின் முகவரியும், பள்ளியில் தரப்பட்டுள்ள அடையாள அட்டையின் நகலையும் இணைத்து அனுப்ப வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளிடமிருந்து பெறப்படும் சிறந்த கட்டுரைக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5000, இரண்டாவது பரிசு ரூ.3000 மற்றும் மூன்றாவது பரிசு ரூ.2000 வழங்கப்படும்.

பொது மக்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். தங்கள் கட்டுரைகளுடன் பெயர், வயது மற்றும் முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும். சிறந்த கட்டுரைக்கு முதல் பரிசு ரூ.25ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரம் மற்றும் மூன்றாவது பரிசு ரூ.10ஆயிரம் வழங்கப்படும்.

மேலும், கட்டுரைகளை மேலே குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் smartcity@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அல்லது mygov.in என்ற இணையதளத்திலும் கட்டுரையை சமர்ப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in