

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடையில் ரூ.1-க்கு லெக்கின்ஸ் விற்றதால் கரோனா ஆபத்தை உணராமல் ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பு அருகே இன்று புதிதாக ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. இக்கடையில் திறப்பு விழா சலுகையாக ரூ.1-க்கு லெக்கின்ஸ் விற்கப்படும் எனவும் ஒரு பெண்ணுக்கு ஒன்று மட்டும் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடை திறக்கும் முன்பே காலையிலேயே சிறுமிகள் உட்பட ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அவர்களில் பலர் சமூக இடைவெளியின்றி முகக்கவசம் அணியாமல் நின்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
பிறகு டோக்கனுக்கு கொடுக்கப்பட்டு வரிசையாக அனுப்பி வைக்கப்பட்டனர். பண்டிகை காலங்களில் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அரசு அறிவிப்பு செய்துள்ளநிலையில், ரூ.1 லெக்கின்ஸ்க்காக பெண்கள் குவிந்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.