

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான காவல் துறையினர் கண்ணமங்கலம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகிக்கும்படி, அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், 40 பாக்கெட்டுகளில் 100 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், லாரியில் இருந்தவர்களிடம் நடத் தப்பட்ட விசாரணையில், திருவண் ணாமலை அண்ணா நகர் 9-வது தெருவில் வசிக்கும் உலகநாதன் (48), அண்ணா நகர் 7-வது தெரு வில் வசிக்கும் ஜாகீர் உசேன்(48), திருநெல்வேலி மாவட்டம் பாளை யங்கோட்டை காந்தி நகர் 3-வது தெருவில் வசிக்கும் லாரி ஓட்டுநர் லூர்து அந்தோணி(39) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த திருவண் ணாமலை பூவந்த குளத்தில் வசிக்கும் சீனுவாசன் மனைவி ஆஷா(32), மாரியம்மன் கோயில் 3-வது தெருவில் வசிக்கும் தமிழரசன்(26), சமுத்திரம் பகுதி வண்டிமேட்டு தெருவில் வசிக்கும் சுகுமார் மனைவி சுலோச்சனா(45), அன்பழகன் மனைவி சகுந்தலா(21) உள்ளிட்ட 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 100 கிலோ கஞ்சா, ஒரு லாரி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.