

தீபாவளி பண்டிகையின்போது நள்ளிரவு 12 மணிவரை கடை திறக்க அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 17-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் புதிதாகச் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா பேசியதாவது: கரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்து உயிர்இழந்த வியாபாரிகளுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்,
சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளதால் தீபாவளியின்போது பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதிஜவுளிக்கடை, பட்டாசுக் கடை,இனிப்பகம் உள்ளிட்ட கடைகளைஇரவு 12 மணி வரை வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக் கொண்டார்.