படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பாளர்களால் மீண்டும் உடைக்கப்பட்ட அம்மணம்பாக்கம் ஏரி

உடைக்கப்பட்ட அம்மணம்பாக்கம் ஏரிக் கரை.
உடைக்கப்பட்ட அம்மணம்பாக்கம் ஏரிக் கரை.
Updated on
1 min read

படப்பை அருகே ஒரத்தூர்ஊராட்சியில் ஆக்கிரமிப்பாளர்களால் மீண்டும் அம்மணம்பாக்கம் ஏரி உடைக்கப்பட்டுள்ளதால் ஒரத்தூர் ஆரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீர் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

குன்றத்தூர் ஒன்றியம், படப்பைஅருகே ஒரத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அம்மணம்பாக்கம் கிராம ஏரி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒரத்தூர் ஆரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து ரூ.5.50 கோடியில் 600 கன அடி தண்ணீர்வரும் வகையில் 1,100 மீட்டர்நீளம் கொண்ட கால்வாய் அமைக்கப்பட்டு அம்மணம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஒரத்தூர் ஆரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்ததால் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அம்மணம்பாக்கம் ஏரிக்கரையை உடைத்துவிட்டனர். இதனால் தண்ணீர் வீணாவதாகவும். குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியஅதிகாரிகள் விரைந்து அம்மணம்பாக்கம் ஏரியை சீரமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: அம்மணம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளோர் கடந்த ஆண்டும் ஏரிக்கரையை உடைத்து, ஏரிநீரை வெளியேற்றினர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிஉள்ளதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் மதகுப் பகுதியை மீண்டும் உடைத்துள்ளனர்.

இப்படி உடைக்கப்பட்ட அம்மணம்பாக்கம் ஏரியை சீரமைக்க குன்றத்தூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. எனவேகாஞ்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in