

சதாப்தி, ராஜ்தானி உட்பட 90 ரயில்களின் வேகம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் 4-வது பெரிய நிறுவனமாக இந்திய ரயில்வே துறை இருந்து வருகிறது. தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் இந்திய ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக இந்திய ரயில்களின் வேகம் கூட்டப்படாமல் இருக்கி றது. இந்நிலையில் ரயில்வேத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரயில்பாதைகளை விரிவுபடுத்துதல், ரயில்களின் வேகத்தை கூட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக மூன்று ராஜ்தானி ரயில்கள், இரண்டு சதாப்தி விரைவு ரயில்கள் உட்பட மொத்தம் 90 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறும்போது, “கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட புதிய காலஅட்டவணைப்படி 90 ரயில் களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள் ளது. இதனால், பயணிகள் சுமார் 10 நிமிடங்களில் இருந்து 110 நிமிடங்கள் வரையில் சேமிக்க முடியும். பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், பல்வேறு வழிப்பாதைகளில் முழுமையாக ஆய்வு நடத்திய பிறகே, கணிசமாக அளவுக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
அடுத்த சில மாதங்களில் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை கணிசமாக அதிகரிக்கவுள்ளோம்’’ என் றனர்.