போக்குவரத்து ஊழியர்களுக்கு 25% போனஸ் வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்களுக்கு 25% போனஸ் வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

Published on

போக்குவரத்து ஊழியர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தீபாவளியையொட்டி போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான போனஸ் தொடர் பாக இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இந்த ஆண்டு 25 சதவீத போனஸ் வழங்க வேண் டும் என போக்குவரத்து தொழிற் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஜெ.லட்சு மணன் கூறும்போது, ‘‘போக்கு வரத்துத் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் போக்கு வரத்துத் துறை அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் அறி விக்க வேண்டும். கடந்த ஆண்டு சேமநல ஓட்டுநர், நடத்துநர் உட்பட சுமார் 47 ஆயிரம் பேருக்கு போனஸ் மட்டுமே வழங்கப் பட்டது. கருணைத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்து தொழிலாளர் களுக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்ந்துள்ளதால் பண்டிகை முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்’’ என்றார்.

தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) துணை பொதுச் செயலாளர் கே.சேகர் கூறும்போது, ‘‘கடந்த 1998-ம் ஆண்டு முதல் 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை சேர்ந்து 20 சதவீதம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு 25 சதவீதமாக உயர்த்தி அனைத்து போக்குவரத்து தொழி லாளர்களுக்கும் வழங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். இது தொடர்பாக அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தீபாவளிக்கு முன்கூட்டியே போனஸ் வழங்கினால் தொழி லாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in