

ராயப்பேட்டையில் 2 வயது குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சென்னை ராயப்பேட்டை மஹ்தி உசைன் அலிகான் தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களின் 2 வயது மகள் பிரகதிதா, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதனால், குழந்தையை நேற்று முன்தினம் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ரத்தப் பரிசோதனை
இது தொடர்பாக குழந்தை யின் உறவினர்கள் கூறும்போது, “மருத்துவமனையில் ரத்தப் பரி சோதனை செய்து பார்த்து விட்டு, குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் தெரி வித்தனர். குழந்தையை எப்படியும் குணப் படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், குழந்தை இறந்துவிட்டது” என்றனர்.