

தமிழகத்தில் நடைபெற்றுவரும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டிடப்பணிகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக குழுவினர் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ.325 கோடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முன்னேற்றம் குறித்து மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் டி.சபீதா தலைமையில் சென்னை அரசு ஓமாந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை இயக்குநர் ஆர்.விமலா, தேசிய மருத்துவ ஆணைய சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர்ஆய்வு செய்தனர்.
அம்மா பூங்கா அருகே கட்டப்பட்டு வரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படும் மருத்துவமனை கட்டிடப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், கல்லூரி வளாகத்தில் அமையுள்ள பல்வேறு கட்டிடப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் டி.சபீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மருத்துவக் கல்லூரியில் வகுப்பறை, விடுதி உள்ளிட்ட கட்டிடப்பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது. பணிகள் திருப்திகரமாக உள்ளது. தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரக ஆய்வுக்குபின், தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் ஆய்வு செய்யப்படும்.
அதன்பின்னரே கல்லூரி துவங்கப்படும். தமிழகத்தில் புதிதாக துவங்கப்படும் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல்,நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகபட்டினம், கிருஷ்ணகி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 புதிய மருத்துவக் கல்லூரி கட்டிடப்பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளோம்” எனக் கூறினார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு(மருத்துவத்துறை) செயற்பொறியாளர் சங்கரலிங்கம், செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை மின் பராமரிப்பு) சுஜாதா, உதவிக்கோட்டப் பொறியாளர்(மருத்துவத்துறை) ஜெயதுரை உள்ளிட்ட