Published : 27 Oct 2020 01:13 PM
Last Updated : 27 Oct 2020 01:13 PM

திருச்சியில் 109 நாட்களுக்குப் பின் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்தது

திருச்சியில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 109 நாட்களுக்குப் பின் 500-க்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா வால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் 46 பேருக்கும், தஞ்சாவூரில் 63 பேருக்கும், திருவாரூரில் 45 பேருக்கும், நாகையில் 25 பேருக்கும், புதுக்கோட்டையில் 28 பேருக்கும், கரூரில் 27 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், அரியலூரில் 6 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும் நேற்று கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேபோல, கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததைத் தொடர்ந்து திருச்சியில் 79 பேர், அரியலூரில் 15 பேர், கரூரில் 37 பேர், திருவாரூரில் 73 பேர், தஞ்சாவூரில் 72 பேர், புதுக்கோட்டையில் 48 பேர், நாகையில் 66 பேர், பெரம்பலூரில் 9 பேர் நேற்று வீடு திரும்பினர்.

500-க்கும் கீழ்...

இதையடுத்து திருச்சியில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 499 ஆக உள்ளது. கடந்த ஜூலை 9-ம் தேதி திருச்சியில் 495 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

அண்மைக் காலமாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், 109 நாட்களுக்குப் பின் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது.

அதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை கடந்த 20-ம் தேதியிலிருந்து தொடர்ந்து ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x