Published : 27 Oct 2020 01:06 PM
Last Updated : 27 Oct 2020 01:06 PM

ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு பல ஆண்டுகளாக தீர்வு கிடைப்பதில்லை என புகார்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை என்பது மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள தாக புகார் எழுந்துள்ளது.

பல்வேறு பொதுப் பிரச்சினை களுக்காக மாவட்ட நிர்வாகத்துக்கு வருபவர்கள் கூறும்போது, "விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைக ளுக்காக மனுக்கள் மேல் மனுக் கள் அளித்து ஓய்ந்துவிட்டோம். விவசாயிகளின் பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகம் நிராகரிக் கப்பதாகவே கருதுகிறோம். உப்பாறு அணைக்கு தண்ணீர்கொண்டுவருவது தொடங்கி, வட்டமலை கிராமம் அவிநாசி பாளையம் கிராமத்தில் பொதுமக்க ளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையூறு ஏற்படுத்தும் கார்பன் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பது வரை பல ஆண்டுகளாக அளிக்கப்பட்டுவரும் மனுக்களுக்கு எந்தவித தீர்வும் ஏற்படவில்லை.

திருப்பூர் மாவட்டம் உதயமாகி 10 ஆண்டுகளுக்கு பின், இப்படி யொரு தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறோம்.

உப்பாறு அணைக்கு நீர் கொண்டுவருவது தொடர்பாக ஒரு குழுவை ஏற்படுத்துங்கள் என்கிறோம். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. விவசாயத் தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் என ஒருங்கிணைந்து பிரச்சினைகளை தீர்க்கக் கோரி மனு அளித்தால்கூட தீர்க்கப்படு வதில்லை என்பதுதான் வருத்தம்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த 6 மாதங்களாக நடைபெறவில்லை. ஆனால், கடந்த கூட்டங்களில் வருவாய்த் துறையை சேர்ந்த பலர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இரண்டு மாதங்களுக்கு முன்பு மனு அளித்தோம்.

இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், "சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் விநியோகித்துள்ளோம்’ என்கின்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்றாமல், நோட்டீஸ் விநியோகிப்பது என்பது எப்படி சரியான நடவடிக்கை யாகும்? இது போன்று பல்வேறு பிரச்சினைகளை கூற லாம். விவசாய சங்கத் தலைவர்கள், கிராம மக்கள் குழுவாக சென்று அளிக்கப்படும் மனுக்கள் மீதும் நடவடிக்கை இல்லை" என்றனர்.

திருப்பூர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஜெகநாதன், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "வாரந்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்துகி றோம். மனுக்கள் மீது பதில் இல்லையென்றால், ஏன் என்று கூட்டத்தில் கேட்கப்படுகிறது. குறிப்பிட்டு சொன்னால், சம்பந்தப் பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x