2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவை வருகை

கோவையில், மறைந்த ஆர்ய வைத்திய சாலையின் தலைவர் கிருஷ்ணக்குமாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.
கோவையில், மறைந்த ஆர்ய வைத்திய சாலையின் தலைவர் கிருஷ்ணக்குமாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.
Updated on
1 min read

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு கோவை சாடிவயல் அருகேயுள்ள ஆசிரமத்தில் இன்றும், நாளையும் (அக்.27, 28) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் விமானம் மூலம் நேற்று கோவைக்கு வந்தார். துணை ராணுவம் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக, திருச்சி சாலையில் உள்ள ஆர்ய வைத்திய சாலைக்கு சென்ற மோகன் பாகவத், அதன் முன்னாள் தலைவர் மறைந்த கிருஷ்ணக்குமாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in