

சிதம்பரத்தில் இன்று குஷ்பு பங்கேற்க உள்ள பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அண்மையில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.அதில்,பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
இரு ஆர்ப்பாட்டங்களுக்கும் சிதம்பரம் நகர போலீஸார் அனுமதி மறுத்தனர். தடை விதித்து நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தனர். தடை மீறி பாஜகவினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால் சிதம்பரத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.