ரஜினி - ஏ.சி.சண்முகம் சந்திப்பு

ரஜினி - ஏ.சி.சண்முகம் சந்திப்பு
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்தை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல்வருகை குறித்த பேச்சுகளும், எதிர்பார்ப்பும் ஒவ்வொரு தேர்தலின்போதும் காணப்படுகிறது. ‘‘தான் அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்கி, அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன்’’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி உறுதிபட தெரிவித்தார். பின்னர், ‘‘மக்களிடம் எழுச்சி வர வேண்டும். அப்போதுதான் கட்சி தொடங்குவேன்’’ என்று கூறினார்.

இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றம் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய பிரமுகர்களும் அவ்வப்போது ரஜினியை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்துக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று வந்து, ரஜினியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. நட்பு ரீதியாகவும், விஜயதசமி வாழ்த்துகளை தெரிவிக்கவுமே சந்தித்ததாக கூறப்பட்டாலும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in