Published : 27 Oct 2020 06:41 AM
Last Updated : 27 Oct 2020 06:41 AM

கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத் திட்டப் பணிகள்: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

கொளத்தூர் தொகுதியில் நடந்துவரும் மக்கள்நலத் திட்டப் பணிகளை அத்தொகுதியின் எம்எல்ஏவான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கொளத்தூர் தொகுதியில் நேற்று சுற்றுப் பயணம் செய்தஸ்டாலின், வீனஸ் நகர் 5-வதுகுறுக்குத் தெருவில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக விடுதி கட்டப்படும் இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஜம்புலிங்கம் பிரதான சாலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.40 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார்.

பி்ன்னர், ஹரிதாஸ் தெருவிலுள்ள தாமரைக் குளத்தைச் சுற்றி வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.43 லட்சத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலியைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, சின்னக்குழந்தை பிரதான தெரு, மடுமா நகரில் அமைந்துள்ள ஆண்களுக்கான உடற்பயற்சி கூடத்துக்கு ரூ.15 லட்சத்தில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள உடற்பயற்சிக் கருவிகளை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், ஜவஹர் நகர் 2-வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சத்து 5 ஆயிரத்தில் வாங்கப்பட்ட புதிய உடற்பயிற்சிக் கருவிகளையும் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x