மொகரம் பண்டிகை: அக்.24-ல் தமிழக அரசு விடுமுறை

மொகரம் பண்டிகை: அக்.24-ல் தமிழக அரசு விடுமுறை
Updated on
1 min read

மொகரம் பண்டிகைக்காக 23-ம் தேதிக்கு பதில் 24-ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியிலேயே வெளியிடப்பட்டது. இதில், மொகரம் பண்டிகைக்கு அக்டோபர் 23-ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமை காஜி கடந்த 16-ம் தேதி அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மொகரம் தொடர்பான பிறை, கடந்த 23-ம் தேதி தெரியவில்லை. இதனால், மொகரம் 24-ம் தேதிதான் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்திருந்த 23-ம் தேதிக்கு பதில் 24-ம் தேதி (சனிக்கிழமை) மொகரம் பண்டிகைக்கான அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in