

தமிழ் செய்தி தொலைக்காட்சி யான ‘நியூஸ் 7’ சேனலுக்கு, ‘இந்து’ என்.ராம் அளித்த பிரத்யேக நேர்காணல் நேயர்களின் விருப் பத்துக்கிணங்க நாளை மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
‘நியூஸ் 7’ செய்திச் சேனலில் ‘பேசும் தலைமை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் நாட்டின் மூத்த பத்திரிகையாளரான ‘இந்து’ என்.ராமின் நேர்காணல் சமீபத்தில் ஒளிபரப்பானது.
இதில் ஊடகத் துறையில் தான் சந்தித்த சவால்கள், இந்து குழுமத் தின் செயல்பாடுகள், ஊடகத்துறை யின் எதிர்காலம், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் சிறப்பம்சங்கள் குறித்து பல்வேறு அனுபவங்களை ‘இந்து’ என்.ராம் பகிர்ந்து கொண்டார்.
பல்வேறு பிரிவு மக்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நேர் காணல் நேயர்களின் விருப்பத்துக் கிணங்க மீண்டும் ஒளிபரப்பப்படுகி றது. ‘நியூஸ் 7’ சேனலில் நாளை பிற்பகல் 3 மணிக்கு இந்த நேர் காணல் மறுஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.