

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.
நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜையும், நாளை (அக்.26) விஜயதசமியும் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 80 டன் முதல் 100 டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பூக்கள் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை சிறிது உயர்ந்துள்ளது. இருப்பினும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரையிலும், கனகாம்பரம் ரூ.1000, பிச்சிப் பூ ரூ.500, முல்லைப் பூ ரூ.600, செவ்வந்திப் பூ ரூ.200, கோழிக் கொண்டைப் பூ ரூ.80, மரிக்கொழுந்து ரூ.120, அரளிப்பூ ரூ.400 என விற்பனையானது.
மேலும் நாளை முகூர்த்த நாளாக இருப்பதால் வழக் கத்தைவிட பூக்கள் விற்பனை அதி கரித்துள்ளது. பூக்களின் விலை நாளை இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.