உயில் சாசனத்தில் கூறியபடி தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய மகள்

தனது தந்தையின் உயில் சாசனத்தின் பேரில் இதய நோயாளிக்கு உதவும் வகையில் ரூ. 50 ஆயிரத்தை கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் வழங்கிய தேன்மொழி. உடன் எஸ்.பி. அபிநவ் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
தனது தந்தையின் உயில் சாசனத்தின் பேரில் இதய நோயாளிக்கு உதவும் வகையில் ரூ. 50 ஆயிரத்தை கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் வழங்கிய தேன்மொழி. உடன் எஸ்.பி. அபிநவ் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
Updated on
1 min read

கடலூர் தேரடித்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசுந்தரம். இவர் வட்டாட்சியராக பணி புரிந்து கடந்த 1996ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். கடந்த 2019 நவம்பர் 17-ம் தேதி உயிரிழந்தார்.

அவரது இளைய மகள் கயல்விழிக்கு எழுதிய உயில் சாசனத்தில் நம்முடைய நன்செய் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் ரூ 50 ஆயிரத்தை என் மனைவி ஏ.ரமணி அம்மாளின் நினைவாக கடலூர்வட்டத்தில் இதய நோயினால் பாதிக்கப் பட்ட ஏழைகளுக்கு உதவிடும் பொருட்டு கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் ஆறுமுகசுந்தரத் தின் மகள் கயல்விழி தனது தந்தை எழுதிய உயில் சாசனத்திற்கு மதிப்பளித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோ லையை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in