Published : 25 Oct 2020 06:33 AM
Last Updated : 25 Oct 2020 06:33 AM

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக கூட்டணி கட்சியினரும் முன்மொழிவர்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளராக பழனிசாமியின் பெயரைகாலம் வரும்போது கூட்டணியில் உள்ளவர்களும் முன்மொழிவார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மீன்வளத் துறை அலுவலகத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க, சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

திமுக காழ்ப்புணர்ச்சி

முதல்வரும் ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்தார். அதன்பின் அமைச்சர்கள் சந்தித்தபோதும் ஆளுநருக்கு அழுத்தம் தரப்பட்டது. அவரும் 3 அல்லது 4 வாரத்தில் நல்ல செய்தி கொடுப்பதாக தெரிவித்தார்.

ஆனால், வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்பதற்காகவும் தங்கள் போராட்டத்தால்தான் கிடைத்தது என்ற மாயையை உருவாக்கவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.

பெண்களை இழிவாக பேசிய விவகாரத்தில் திருமாவளவனுக்கு ஸ்டாலின் சாதகமாக பேசுகிறார். புகாரின் அடிப்படையில்தான் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, சட்டம் தன் கடமையை செய்துள்ளது. அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை முன்மொழிந்துள்ளோம். காலம் வரும்போது கூட்டணியில் உள்ளவர்களும் முன்மொழிவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x