சீன பட்டாசுகளுக்கு எதிராக நடவடிக்கை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சீன பட்டாசுகளுக்கு எதிராக நடவடிக்கை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சீன பட்டாசுகள் விற்பனைக்கு எதிரான மனுவைப் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூர் சின்னக்கடை தெரு வைச் சேர்ந்த கே.சித்திரைஜோதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் 982 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 800 தொழிற்சாலைகள் சிவகாசியில் செயல்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளில் 5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்தியாவில் சணல், கந்த கம், காகிதம் வைத்து தயாரிக் கப்படும் பட்டாசுகள் மக்கும் தன்மை கொண்டவை. இவை அதிக ஆபத்துகளை ஏற்படுத்தாது.

ஆனால், சீன பட்டாசுகள் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்த வகையான பட்டாசுகள் குளோரேட் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரிக் கப்படுகின்றன. சீனப் பட்டாசுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஒரு கிலோ ரூ.50-க்கு கிடைக்கிறது. ஆனால், இந்திய பட்டாசுகளைத் தயாரிப்பதற் கான மூலப் பொருளுக்கு ஒரு கிலோ ரூ.300 ஆகிறது. இதனால் சீன பட்டாசுகளை குறைந்த விலைக்கு விற்கின்றனர்.

ஆபத்துகள் நிறைந்த சீன பட்டாசுகளின் விற்பனையைத் தடுக்க, பட்டாசு விற்பனை உரிமம் வழங்கும்போது சீன பட்டாசுகளை இருப்பு வைக்கவோ, விற்கவோ, காட்சிக்கு வைக்கவோ கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, சீனப் பட்டாசு களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தலைமை வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in