Published : 24 Oct 2020 10:07 PM
Last Updated : 24 Oct 2020 10:07 PM

தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

டி.ஜி.வினய், அன்பழகன், அபூர்வா வர்மா, பொன்னையா | கோப்புப் படம்.

சென்னை

தமிழகத்தின் மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, பெரம்பலூர், கரூர், கன்னியாகுமரி , பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

8 மாவட்ட ஆட்சியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தவிர வேறு சில அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளர்.

இதுகுறித்த அவரது உத்தரவு:

1. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியச் செயலாளர் பி.கணேசன் மாற்றப்பட்டு நகரம் மற்றும் ஊரகத் திட்டமிடல் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சென்னை கலால் துறை துணை ஆணையர் சங்கீதா மாற்றப்பட்டு உயர் கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வருவாய்த்துறை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் அருணா மாற்றப்பட்டு வேளாண்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாற்றப்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் மாற்றப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. அரசு நிதித்துறை இணைச் செயலர் அரவிந்த் மாற்றப்பட்டு கன்னியாகுமரி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மாற்றப்பட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. பட்டு வளர்ப்புத்துறை இயக்குனர் ஸ்ரீ வெங்கட ப்ரியா மாற்றப்பட்டு பெரம்பலூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாற்றப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மாற்றப்பட்டு சேலம் மாவட்ட பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. தருமபுரி ஆட்சியர் மலர்விழி மாற்றப்பட்டு கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. தமிழ்நாடு ஊரக மாற்றம் திட்டத் தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.பி.கார்த்திகா மாற்றப்பட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம், திட்ட இயக்குனர் அஜய் யாதவ் மாற்றப்பட்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் சிவஞானம் மாற்றப்பட்டு தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம், திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. தமிழ்நாடு நகர நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் தலைவர் /மேலாண் இயக்குனர் அபூர்வா வர்மா மாற்றப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் இணை மேலாண் இயக்குனர் நிர்மல் ராஜ் மாற்றப்பட்டு ஆசிரியர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. செய்தித்துறை இயக்குனர் ஷங்கர் மாற்றப்பட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

18. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் டி.ஆனந்த மாற்றப்பட்டு தமிழ்நாடு வேளாண்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x