Published : 24 Oct 2020 12:06 PM
Last Updated : 24 Oct 2020 12:06 PM

இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் காணப்படும்: குளறுபடிகளை களைய அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன். படம்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்

இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டுமென, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போது 2484 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 9 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2493 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. வேறு இடத்துக்கு 41 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. மாற்றம் செய்யப்பட உள்ள வாக்குச்சாவடிகள் 7.

வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பப்பட்ட முன்மொழிவுகளை இறுதி செய்ய, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தி, சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதலை பெற அனுப்பப்பட உள்ளது என, ஆட்சியர் தெரிவித்தார்.

அதிகாரிகள் ஆய்வு?

மேலும், அரசியல் கட்சிகளிடம் பெறப்பட்ட 24 கோரிக்கைகளில் 15 ஏற்கப்பட்டு, 9 நிராகரிக்கப்பட்டுள்ளது. 1500 வாக்காளர்களுக்கு ஒருவாக்குச்சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் இருந்தால்,சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாநகராட்சி அல்லதுநகராட்சி ஆணையரிடம் தகவல்அளிக்கலாம் என கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சியினர் பேசும்போது, ‘‘திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டு திருக்குமரன் நகரில் 5 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் அதிகப்படியான வாக்காளர்கள் உள்ளனர். இதில், 53-வது வார்டை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர். குடியிருப்புக்கும், வாக்குச்சாவடிக்கும் அதிக தூரம் இருப்பதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி பட்டியலில் இதுபோன்ற குளறுபடிகள் ஏராளமாக உள்ளன. திருத்தப்பட்டியலை அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வுசெய்தால் மட்டுமே, அது திருத்தப்பட்ட பட்டியலாக இருக்கும். பணிகளும் முழுமை பெறும்’’ என்றனர்.

தாராபுரம் சார்-ஆட்சியர் பவண்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர்க.சிவகுமார், அனைத்து வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x