

நமக்கு நாமே திட்டத்துடன் நடைப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், செல்லும் இடமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் பொதுமக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனாலும் சிறுமுகையில் பட்டு நெசவாளர்களும், விவசாயிகளும் ஸ்டாலினை சந்திக்க தயங்கியதாக சொல்லப்படுகிறது.
நமக்கு நாமே திட்டத்தின் 2-ம் கட்ட சுற்றுப் பயணத்தை நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கிய ஸ்டாலின், அன்று இரவு மேட்டுப்பாளையம் கல்லா றில் தங்கினார். நேற்று காலை 9 மணியளவில் மேட்டுப்பாளை யத்தில் தனது பிரசாரப் பயணத் தைத் தொடர்ந்தார்.
சிறுமுகை, சத்தியமங்கலம் செல்லும் அண்ணாஜி ராவ் சாலைக்கு காரில் தன் பயணக் குழு வுடன் வந்திறங்கிய ஸ்டாலின், வியாபாரிகள் மற்றும் பொதுமக்க ளிடம் நலம் விசாரித்தார்.
தொடர்ந்து கோவை தேசிய நெடுஞ்சாலை வழியே சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்ற அவர், வழியில், பேருந்துகளில் இருந்த பயணிகளிடமும் பிற வாகன ஓட்டிகளிடமும் கை குலுக்கினார். ஒரு திரையரங்கு அருகே சாலையோர டீக் கடைக்குச் சென்று டீ கேட்டார். அவர்கள் ‘டீ இல்லை; டிபன்தான்’ என்று தெரிவிக்க, தோசை வாங்கி இரண்டு வாய் சாப்பிட்டார். மீதம் வைத்துவிட்டு 100 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்தார். மேட்டுப்பாளையம் நகர எல்லையின் அருகே நடை பயணத்தை முடித்துக்கொண்டு தனது வாகனத்தில் ஏறி காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வழியே கோவை சென்றார்.
முன்னதாக, சிறுமுகை கைத் தறி பட்டு நெசவாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், கல்லாறு பாக்கு உற்பத்தியாளர்கள், வன மிருகங் களால் தொல்லையுறும் விவசாயி கள் உள்ளிட்டோரை ஸ்டாலின் சந் திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
ஆனால் அவர்கள் பெரும் பான்மையோர் ஸ்டாலினை சந்திக்கத் தயங்கியதால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர். கோவை சரவணம் பட்டியில் செயல்பட்டுவரும் மென்பொருள் நிறுவனத் துக்குச் சென்று பொறியாளர் களுடன் அவர் உரையாடினார்.