Published : 24 Oct 2020 06:32 AM
Last Updated : 24 Oct 2020 06:32 AM

மீனவர்களுக்கான ‘தூண்டில் செயலி’: ஆபத்து காலங்களில் உதவும்; பதிவிறக்கம் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை

ஆபத்து காலத்தில் உதவும் தூண்டில் செயலியை பதிவிறக்கம் செய்ய மீனவர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

‘தூண்டில் செயலி’யை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்யும் மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும்போது தங்களது இருப்பிடம், கடற்பயண பதிவு கள், பாதுகாப்பான இடம்செல்ல வழிகாட்டி, மீன் அதிகம்கிடைக்கும் இடங்களை பதிவுசெய்தல், வானிலை நிலவரம்உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெற முடியும். இந்த செயலியை செல்போனில் வைத்திருப்பவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து ஆபத்து காலத்தில் உடனடியாக மீட்கவும் முடியும்.

வடகிழக்குப் பருவமழை...

ஆனால் ‘தூண்டில் செயலி’குறித்து மீனவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை.எனவே, வடகிழக்கு பருவமழைதொடங்குவதற்கு முன்பாக அனைத்து மீனவர்களும் ‘தூண்டில் செயலி’யை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x