Published : 24 Oct 2020 06:25 AM
Last Updated : 24 Oct 2020 06:25 AM

போனஸ் கோரி அக்.30-ல் ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை

தீபாவளி போனஸ், பண்டிகைக்கால முன்பணம் வழங்கக் கோரிவரும் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் அடங்கிய போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள், புதிய ஊதியஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக சென்னையில் தொழிலாளர் ஆணையர் முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 22-ம் தேதி நடந்தது. ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி, ஊழியர்களுக்கான ஓய்வுகால பலன்கள், தினக்கூலி, ரிசர்வ் தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளிட்டகுறைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அதில் சுட்டிக்காட்டினோம்.

நிர்வாகங்கள் ஒப்புக்கொண்ட விஷயங்களை நிறைவேற்றுவது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றுதொழிலாளர்கள் ஆணையர் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பதற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிச.1-ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள் ளது.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. தீபாவளி போனஸ், பண்டிகைக் கால முன்பணம் தொடர்பாக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பு, வரும் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x