காஞ்சிபுரம் பட்டு, ஜரிகைகளால் கலாம் உருவம் வடிவமைப்பு

காஞ்சிபுரம் பட்டு, ஜரிகைகளால் கலாம் உருவம் வடிவமைப்பு
Updated on
1 min read

காஞ்சிபுரம் பட்டு, ஜரிகைகளால் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவப் படம் வடிவமைக்கப்பட்ட அங்கி அவரது அண்ணன் முத்து மீரா மரைக்காயரிடம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சேவைகளைப் போற்றும் வகையில் அவரது உருவப் படத்தை தூயபட்டு, ஜரிகையால் ஆன அங்கியில் வடிவமைத் துள்ளார்.

இதில் அப்துல் கலாம் பிறந்த 1931-ம் ஆண்டை நினைவூட்டும் விதமாக 1931 பட்டு இழைகளும், அவரது இறந்த ஆண்டைக் குறிக்கும் வகையில் 2015 தூய ஜரிகைகளையும் பயன்படுத்தி இரண்டே முக்கால் அடி நீளம், ஒன்றே முக்கால் அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை காஞ்சிபுரம் அய்யன் பேட்டையைச் சேர்ந்த சரவணன், தேவராஜ், தர் ஆகிய நெசவாளர்கள் வடிமைத்துள்ளனர்.

இந்த அங்கியை ராமேசுவரத்தில் வசிக்கும் கலாமின் அண்ணன் முத்து மீரா மரைக்காயரிடம் பரமசிவம் நேற்று வழங்கினார். அப்போது கலாமின் மருமகன் நிஜாமுதீன், பேரன் ஆவுல் மீரா ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து பரமசிவம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

எனது மகன்கள் மோனிஷ், அனிஷ் ஆகிய இருவரும் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி பிறந்தார்கள்.

மேலும் 28 அங்கிகள்

இதனால் கலாமின் சேவைகளை போற்றும் வகையில் இந்த உருவப்படத்தை காஞ்சிபுரம் பட்டு, ஜரிகையினால் வடிவமைத்தேன். முதல் படத்தை அவரது சகோதரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி உள்ளேன். இதுபோல் மேலும் 28 பட்டு, ஜரிகை அங்கிகளை தயாரிக்க உள்ளேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in