Last Updated : 23 Oct, 2020 03:53 PM

 

Published : 23 Oct 2020 03:53 PM
Last Updated : 23 Oct 2020 03:53 PM

தொழில்நுட்ப கோளாறால் புதுச்சேரி ஐயப்ப பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம்; கேரள முதல்வருக்கு நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

தொழில்நுட்பக் கோளாறால் முன்பதிவு சீட்டை ஸ்கேன் செய்ய முடியாததால் புதுச்சேரி ஐயப்ப பக்தர்களை திருப்பி அனுப்பியது தொடர்பாக கேரள முதல்வருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுவையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சபரிமலைக்கு சென்றனர். தொழில்நுட்பக் கோளாறால் முன்பதிவு சீட்டை ஸ்கேன் செய்ய முடியவில்லை. இதனால் நிலக்கல் சோதனைச்சாவடியில் கேரள அரசு அதிகாரிகள் பக்தர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் தரப்பினர் முதல்வர் நாராயணசாமியிடம் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்: கோப்புப்படம்

இதுபற்றி முதல்வர் நாராயணசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேற்று (அக். 22) அனுப்பியுள்ள கடிதத்தில், "சபரிமலைக்கு சென்ற புதுவை ஐயப்ப பக்தர்களை அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்று, விரதமிருந்து பல கி.மீ. பயணம் செய்து சபரிமலைக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பாமல் மனிதாபிமான அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதித்து இருக்கலாம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x