

விருதுநகரில் தெருவில் செல்லும் சிறுவர்களை அழைத்து அவர்களது வாயில் இளைஞர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
அதேபோல் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டமாக பொது இடங்களில் வாளால் கேக் வெட்டும் வீடியோவும் விருதுநகரில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விருதுநகர் விவேகானந்தர் தெருவில் தெருவோரத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டு இருப்பதும் தெருவில் அந்த வழியாக நடந்து வரும் சிறுவர்களை பிடித்து அவர்களது வாயில் வலுக்கட்டாயமாக இளைஞர்கள் மது ஊற்றும் வீடியோ தற்போது வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை விருதுநகர் மேற்கு போலீஸார் தேடி வருகின்றனர்.