குழந்தை திருமணம் தொடர்பான வழக்கில் பெண் காவலர் உட்பட 8 பேர் மீது வழக்கு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரையில் குழந்தைத் திரு மணங்கள் நடத்தப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் பெண் காவலர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த பரதா மகன் அருண் குமார்(20). பெயின்டரான இவர், கடந்த ஜூன் 3-ம் தேதி மதுரை பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித் திரிந்த 11 வயது சிறுமியிடம் பேசியுள்ளார். அந்த சிறுமிக்கு பெற்றோர் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அருண்குமார், அவரை தன்னுடன் தங்க வைத்து ஆதரவளிப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று ள்ளார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி அக்.21-ம் தேதி குலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அலங்காநல்லூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் நிர்மலா சிறுமியிடம் விசாரித்தார்.

அப்போது, அருண்குமார் சிறுமியை திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. இதற்கு அருண் குமாரின் தந்தை பரதா, தாயார் லட்சுமி, நண்பர் ஜெகநாதன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து அருண்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போக்ஸோ சட்டத்திலும், குழந்தை திருமணத்துக்கு எதிரான சட்டப்பிரிவிலும் போலீஸார் வழக் குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 18-ம் தேதி கீழக்குயில்குடியைச் சேர்ந்த அருண் என்பவர் திருமணம் செய்துள்ளதாக திருப்பரங்குன்றம் ஒன்றிய சமூக நல அலுவலர் முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சிறுமியின் வீட்டில் முத்துலட்சுமி விசாரித்தார். சம்பவம் நிகழ்ந்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து முத்துலட்சுமியின் புகாரின் பேரில் அருண் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சகோதரி விஜயா, உறவினர்களான நாகமலைபுதுக் கோட்டை காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கயல் விழி, அவரது கணவர் ராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in