Published : 23 Oct 2020 06:47 AM
Last Updated : 23 Oct 2020 06:47 AM

பண்டிகை நாட்களையொட்டி மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 9 வரை தற்போது இயக்கப்படுகின்றன. பண்டிகை விடுமுறையையொட்டி இன்றும், நாளையும் காலை 7 மணி முதல் இரவு 9 வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதுபோல், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகள் வசதிக்காக வரும் 27-ம் தேதி காலை 7 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மெட்ரோ ரயில்களின் சேவை அதிகாலை 5.30 மணிக்கே தொடங்கப்படும்.

தொடர் விடுமுறை காரணமாக வரும் 29-ம் தேதி அன்று காலை7 மணி முதல் இரவு 9 வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதுபோல், நவ.2-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நீட்டிக்கப்பட்ட நேரங்களில் மெட்ரோ ரயில்களின் சேவைகள் உச்ச நேரம் (பீக் ஹவர்) இல்லாமல் இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x