

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வுகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. ஆயுதபூஜையை ஒட்டி தென்னிந்திய அமர்வுக்கு அக்டோபர் 21 முதல் 25-ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விடுமுறை நாட்கள் பட்டியலில் அக்டோபர் 21-ம் தேதி இடம்பெறாத நிலையில், அன்றும் விடுமுறை விட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 12-ம் தேதி சனிக்கிழமை தென்னிந்திய அமர்வு இயங்கும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.